கதிர்காமத்தில் உள்ள விடுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி 5 வருடங்கள் பழைமையானது என மேலதிக அரசாங்க ஆய்வாளர் டபிள்யு.ஏ.ஆர்.பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது தாக்குதல் நடத்தவென இந்த தற்கொலை அங்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக மேலதிக அரசாங்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று முற்பகல் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதும் அது தொடர்பான தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டன.
பின்னர் அத்தற்கொலை அங்கியானது 5 வருடங்கள் பழைமையானது என இனங்காணப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இது குறித்து தமக்கு அறிவித்துள்ளதாக மேலதிக அரசாங்க ஆய்வாளர் டபிள்யு.ஏ.ஆர்.பெனாண்டோ தெரிவித்துள்ளார்.