.

Home » » நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும்: ரணில்

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும்: ரணில்

எதிர்வரும் மாதங்களில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் அதிகளவு வட்டி அறவீடு செய்யப்படுவதாக மத்திய வங்கி ஆளுனர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொண்டால் இரண்டு வீத வட்டியை செலுத்த வேண்டுமென ஆளுனர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டு வர்த்தக வங்கிகளிடமிருந்து ஆறரை வீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்ளவுள்ளது. அதாவது 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு கடன் பெற்றுக் கொள்வதனால் நாடு பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved