.

Home » » இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுடன் இலங்கைக் கடற்படை போர்ப்பயிற்சி..

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுடன் இலங்கைக் கடற்படை போர்ப்பயிற்சி..


அந்தமான் - நிக்கோபர் கடற்பகுதியில் இலங்கை உள்ளிட்ட 14 நாடுகள் பங்குபற்றும் பாரிய கடற்போர்ப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியது.
இந்தியாவின் ஏற்பாட்டில் 14 நாடுகள் கலந்து கொள்ளும் 'மிலன்" என்ற பெயரிலான ஒரு வார கால போர்ப் பயிற்சி நேற்று தொடக்கம் எதிர் வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மிலன் என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு 4 நாடுகளுடன் இணைந்து இந்தப் போர்ப் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா ஆண்டு தோறும் இதனை நடாத்தி வருகிறது.

இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஸ், இந்தோனேசயா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, புறூணை, மியான்மார், ஆகிய 9 நாடுகள் இந்தியக் கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved