புத்தளம் நாத்தாண்டிய தும்மலசூரிய பகுதியில் இலங்கை விமான படையினருக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை விமானப்படை பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற மிக் 27 ரக ஜெட் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான ஜெட் விமானம் மிக் 27 என்று ரக போர் விமானமாகும்.


இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
விமானி உயிர் தப்பினார்.
புத்தளம் நாத்தாண்டிய தும்மலசூரிய பகுதயில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிர் தப்பியுள்ளார்.
கட்டுநாயக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த ஜெட் விமானம் 1.35 மணிக்கு விபத்துக்குள்ளாகியது.
இந்த நிலையில் விமானத்தை செலுத்திய விமானி உயிர் தப்பியுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

