எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலளர் நவுபர் அப்துல் ரஹ்மன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்த உரை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பிலான ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு மற்றும் தற்போது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச ரீதியான நெருக்கடிகளில் இருந்து மீள்வது தொடர்பிலும் ரணில் விக்ரமசிங்க பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.