ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்றைய தினம் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரியின் அழைப்பின் பேரில் அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியுடன், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இந்த விஜயத்தின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதியுடன், பிரதமர் யூசுப் ரசாக் கிளானியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள், பாதுகாப்பு, அபிவிருத்தி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.