கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச நாடுகளை திருப்தி படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை குறிப்பிட்ட சிலரது வாக்கு மூலங்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேசத்தை திருப்தி படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ன அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில விடயங்களை மாத்திரமே நடைமுறைப்படுத்த முடியும் எனவும், ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சூரியன் fm செய்தி பிரிவுக்கே இவர் இவ்வாறு தெரிவித்தார் !