ஐக்கிய நாடுகளின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்பீக் என்ற மனிதஉரிமைகள் அமைப்பு இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர சிறப்புரிமைகளை கருத்தில் கொண்டே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மனிதகுலத்திற்கு எதிராக செயற்பட்ட சவேந்திர சில்வா மீதான வழக்கை தள்ளுபடி செய்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என ஸ்பீக் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது..
இவருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்த தரப்பினரில் ஸ்பீக் என்ற அமைப்பும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.