சில தினங்களுக்கு முன் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கினார் ரஜினிகாந்த். ஏதோ என்னால் முடிந்த உதவி என்று சொன்னார்.
முதலமைச்சரிடம் நிதி வழங்கிய பின், தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்கள் - ஃபெப்சி தொழிலாளர்கள் இடையே நடந்துவரும் பிரச்சினையை பற்றி பேசினாராம்.
இந்த பிரச்சினையில் ரஜினிகாந்த் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு சாதகமாக பேசியதாகவும், முதலமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இன்று (01.02.12) நடிகர் கமலஹாசன் முதலமைச்சரை சந்தித்து, தானே புயல் நிவாரண நிதியாக 15 லட்ச ரூபாய் கொடுத்தார். ஒரு சிறிய உதவியாகத் தான் இதை நினைக்கிறேன், சிறு துளி பெருவெள்ளமாகும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன் என்றார்.
கமலிடம் செய்தியாளர்கள், ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்சினை பற்றி கேட்ட போது “அதை பற்றி பேச நான் இங்கு வரவில்லை” என்று கூறினார். தானே புயலுக்காக திரையுலகம் நிதி திரட்டுமா என்ற கேள்விக்கு, நிறைய பேர் வந்திருக்காங்க, அவங்ககிட்ட கேளுங்க... என்றார்.