உலகின் மிக வயது குறைந்த விமானி என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும் என்கிற அபிலாஷையைக் கொண்டு இருக்கிராம் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ. இவர் பிரித்தானியாவில் தற்போது விமான பொறியியல் பட்டப் படிப்பு படித்து வருகின்றார் எனவும் அறியப்படுகிறது.
இப்படிப்பை நிறைவு செய்கின்றமையைத் தொடர்ந்து ரஷியாவில் விமானம் ஓட்டுதல் சம்பந்தமாக பட்டப் பின்படிப்பு படிக்க உள்ளார் என்றும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மௌபிம பத்திரிகைக்கு விசேட பேட்டி ஒன்று வழங்கி உள்ளார். இப்பேட்டியில் அரசியலுக்கு ஒரு போதும் வரவே மாட்டார் என்றும் உலகின் மிக வயது குறைந்த விமானியாக வர அபிலாஷைப்படுகின்றார் என்றும் முக்கியமாக தெரிவித்து உள்ளார் அவர்.