.

Home » » சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் சு.ப தமிழ்ச்செல்வன் ?

சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் சு.ப தமிழ்ச்செல்வன் ?

விடுதலைப் புலிகளின் கடல் தளபதி சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிக்கினார் என்ற செய்தியை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இலங்கை வான்படைகள் கிளிநொச்சியில் உள்ள இரகசிய இடம் ஒன்றைத் தாக்கினர். அங்கே அதிகாலை 6 மணியளவில் இருந்த சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டார். இருப்பினும் தாம் வேறு ஒரு நபரையே தாக்க முற்பட்டதாக இராணுவ பேச்சாளராக இருந்த பிரிகேடியர் நாணயகார அமெரிக்கத் தூதுவருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துள்ளார். தாம் கடற்படைத் தளபதி சூசை அவர்களையே தாக்க முற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் அதிகாலையில் கூட்டம் நடத்த இருப்பதாக தமக்கு தகவல்கள் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 2 வெவ்வெறு இடங்களில் அக்கூட்டம் நடைபெறவிருந்ததாகவும் அதில் ஒரு கூட்டத்தில் சூசை அவர்கள் கலந்துகொள்ளவிருப்பதாகவும் புலனாய்வுச் செய்திகள் கிடைக்கப்பெற்றதாக இராணுவ பேச்சாளராக இருந்த பிரிகேடியர் நாணயகார தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் விமானங்கள் அப்பகுதியை தாக்கும்போது அங்கே சு.ப.தமிழ்ச்செல்வன் இருந்தது இலங்கை அரசுக்கே தெரியாது.

பின்னர் விடுதலைப் புலிகள் சு.ப.தமிழ்ச்செல்வன் இறந்ததாக அறிவித்ததபின்னரே இலங்கை அரசுக்கு இவ்விடையம் தெரியவந்துள்ளது. அன்றையதினம் கிளிநொச்சிக் கூட்டத்தில் பங்குபற்ற இருந்த புலிகளின் தலைவர் யார் என்று தாம் அறிந்திருக்கவில்லை என்றும் ஆனால் சூசையைத்தான் அங்கு இலக்கு வைத்து தாம் தாக்குதல் நடத்தினோம் என்றும் பிரிகேடியர் நாணயகார அமெரிக்க தூதுவருக்குத் தெரிவித்துள்ளார். விக்கி லீக்ஸிடம் இருந்து
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved