சில தினங்களுக்கு முன் கொலவெறி பாடலுக்காக, அதை எழுதிப் பாடிய நடிகர் தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும், அதில் கலந்து கொண்ட பிறகு தனுஷுக்கு கிடைத்த கூடுதல் பப்ளிசிட்டியும் நாடறிந்த சமாச்சாரம்.
இந்த கொலவெறி விருந்துகள் இப்போதைக்கு ஒய்வது போலத் தெரியவில்லை. ஹீரோ தனுஷுக்கு அடுத்து, அந்தப் படத்தின் ஹீரோயின் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளதாம், பிரதமர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு.
தனுஷ் கலந்து கொண்ட விருந்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் ஜப்பான் பிரதமர்.
இந்த முறை மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலத்துக்கு டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள தனது வீட்டில் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இந்த விருந்துக்குதான் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது, "பிரதமர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியதை கவுரவமாக நினைக்கிறேன். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வயதில் எனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம்தான்," என்றார்.