தொடர் போராட்டங்கள் காரணமாக பதவி விலகிய மாலத்தீவு அதிபர் முகமது நஷீத் குடும்பம் இலங்கையில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நஷீத் மனைவி லைலா அலி புதன்கிழமை இரவு இலங்கை வந்திறங்கியதாக அங்குள்ள பத்திரிக்கை கூறியுள்ளது.
இலங்கை வந்தபிறகு அதிபர் மகிந்தா ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு மாலத்தீவு புதிய அதிபரான முகமது வஷீத்-ஐ தொலைபேசியில் தொடர்புகொண்ட ராஜபக்சே, நஷீத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கேட்டதாகவும், அதற்கு நஷீத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி கூறியதாகவும் அதிபர் அலுவலக தகவல் தெரிவித்துள்ளது.