ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகமது இர்பான் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்தான்.
தன்னைப் பற்றி பெற்றோரிடம் புகார் கூறியதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி தொந்தரவு செய்ததாலும், மதிப்பெண் குறைத்து போட்டதாலும் ஆசிரியையை குத்திக்கொன்றதாக மாணவன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.