பிரிட்டனில் புரோம்லி கோர்ட்(Bromley Court) விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து ஓர் இளம்பெண் சன்னல் வழியாகக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குதிக்க முயன்ற அப்பெண்ணின் ஆடை ஒரு கம்பியில் சிக்கிக் கொண்டது. காதலனை மிரட்டுவதற்காக குதிக்க நினைத்தவள் தான் ஆபத்தில் இருப்பதை நினைத்து மிகவும் பயத்தில் அலறினாள். அறைக்குள்ளிருந்த காதலன் அந்தப் பெண்ணை தன் கைகளால் பிடித்து கொண்டிருந்தான்.
அவளது மற்ற நண்பர்கள் நால்வரும் தரையில் விழுந்து சுக்குநூறாகி விடுவாளோ என்று பயந்தனர். இவர்களின் அலறலைக் கேட்ட நைட்கிளப் மேலாளர் மைக் பிராட்ஃபுட்(55) உடனே தன் புகைப்படக் கருவியில் அவள் சன்னலிலிருந்து தொங்குவதைப் படமெடுத்தார். அவளது நண்பர்கள் ஒரு பக்கம் அவளை அறைக்குள்ளிருந்து இழுக்க அவள் நூலிழையில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
இரவு மணி 9.50க்கு இச்சம்பவம் நடைபெற்றது, அவசர கால மருத்துவ ஊர்தி வந்ததும் அவளைக் கவனமாக இறக்கி ஃபார்ன்பொரோவில்(Farnborough) இருந்த பிரின்சஸ் ராயல் யூனிவர்சிட்டி ஹாஸ்பிட்டலுக்கு(Princess Royal University Hospital) எடுத்துச் சென்றனர். காவல்துறையின் செய்தி தொடர்பாளர் அவளுக்கு மனநோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.