.

Home » » யாழில் மசாஜ் நிலையம் திறக்கக் கூடாதென யாழ்.மாநகர சபை நடவடிக்கை

யாழில் மசாஜ் நிலையம் திறக்கக் கூடாதென யாழ்.மாநகர சபை நடவடிக்கை


யாழ்ப்பாண கலாசாரத்திற்கு முராணான வகையில் யாழ்.நகரில் திறக்கப்படவிருந்த உடல் மசாஜ் நிலையத்தை திறக்க கூடாதென  யாழ்.மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தென்னிலங்கை முஸ்லிம் வர்த்தகர் ஒருவரினால் இந்த மசாஜ் நிலையம் நகரில் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எனினும் அதற்கு பல தரப்புக்களிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த மசாஜ் நிலையத்தை திறப்பதற்கு யாழ்.மாநகர சபையின் அமர்வுகளில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும் குறித்த நிலையத்தை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாதெனவும் எதிர்கட்சியினர் பிரேரணையினை சமர்ப்பித்திருந்தனர். இதனையடுத்து இந்த பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நிலையத்தை திறக்க கூடாதென மாநகர சபையினர் உத்தரவிட்டிருக்கின்றனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved