இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சுயசரிதையை பி.பி.சி ஒளிபரப்பாளர் ஆண்ட்ரூமார் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார்.
அதில் இளவரசர் சார்லஸ் கடந்த 1982ம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் ராணி எலிசபெத்துக்கும், அவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து வருகிறது.
தற்போது 62 வயதாகும் இளவரசர் சார்லஸ் தான் மன்னராகும் போது பல திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக தற்போது தான் தங்கியிருக்கும் பக்கிங்காம் அரண்மனையில் பணிபுரியும் ஊழியர்களை மாற்றி விட்டு புதியவர்களை நியமிக்கிறார். மேலும் பக்கிங்காம் அரண்மனையை அரசு ஆடம்பர ஹொட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளார்.
எனவே அங்கிருந்து வெளியேறி விண்டர் கேஸ்டலில் தங்குகிறார். அது குறித்து தனது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த தகவல் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறி அதை ஹொட்டலாக மாற்றுவது குறித்து இளவரசர் சார்லஸ் விரும்பவில்லை. அது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.