.

Home » » தமிழில் நடிக்க ரூ.1 கோடி கேட்ட மம்மூட்டி

தமிழில் நடிக்க ரூ.1 கோடி கேட்ட மம்மூட்டி

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, தமிழ் படத்தில் நடிக்க ரூ.1 கோடியை சம்பளமாக கேட்கிறார்.

கொலிவுட்டில் தளபதி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார். சமீபத்தில் மம்மூட்டி நடித்த போக்கிரி ராஜா தமிழில் ரீமேக் ஆகி வெளிவந்தது. இருப்பினும் மலையாள மொழிப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் மம்மூட்டியை சந்தித்த தமிழ் படத் தயாரிப்பாளர் அவரிடம் படத்தில் நடிக்க திகதிகள் கேட்டுள்ளார்.இதற்கு மம்மூட்டி, அந்த தயாரிப்பாளரிடம் ஒரு கோடி கேட்டுள்ளார். மேலும் கேரளாவின் வினியோக உரிமையும் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மம்மூட்டியின் இந்த பேச்சால் தமிழ் தயாரிப்பாளர் அமைதியாக எதுவும் பேசாமல் திரும்பி விட்டார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved