.

Home » , » 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் சிவாஜி

3டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் சிவாஜி

ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி- தி பாஸ் படம் 3 டியில் திரைக்கு வருகின்றது.


சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கு பெரிய மார்க்கெட்டை பெற்றுத் தந்த படம் சிவாஜி.

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் சிவாஜி படத்தை மறக்க முடியாது. ஒரு வேளை மறந்திருந்தாலும் இப்போது வரும் 3டி சிவாஜி ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும்.

கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது சிவாஜி.

இந்தப் படத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, பட்டிமன்றம் ராஜா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஏ.வி.எம். நிறுவனம் சிவாஜியை தயாரித்தது. பணக்காரர்கள் பதுக்கி வைத்த பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை மீட்பதை இயக்குனர் ஷங்கர் சூப்பரான முறையில் கூறியிருப்பார்.

ரஜினி காந்தின் கோச்சடையான் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்பு 3டி சிவாஜி வெளியாகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved